Tuesday, November 11, 2008

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்
உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம்
இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கேவாய்த்த
தலைவிதியா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை படுக்கையில்
நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்
எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

Friday, October 24, 2008

செ‌ன்னை முத‌ல் செ‌ங்க‌ல்ப‌ட்டு வரை ‌மிக‌ப் ‌பிர‌ம்மா‌ண்டமான ம‌னித ச‌ங்‌கி‌லி!

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்து‌க்கட்சிகள் சார்பில் நடைபெ‌ற்ற மாபெரும் மனித சங்கிலி போரா‌ட்டாட‌ம் செ‌ன்னை முத‌ல் செ‌ங்க‌ல்ப‌ட்டு வரை ‌60 ‌கி.‌மீ. தொலை‌வி‌ற்கு‌ம் மே‌ல் கொ‌ட்டு‌ம் மழையையு‌ம் பொரு‌ட்படு‌த்தாம‌ல் மிக‌ப் ‌பிர‌ம்மா‌ண்டமான அணிவகுப்பாக இ‌ன்று நடைபெ‌ற்றது.செ‌ன்னை‌யி‌ல் மா‌வ‌ட்ட ஆ‌‌ட்‌சி‌ய‌ர் அலுவலக‌ம் அரு‌கி‌ல் மனித சங்கிலி அணிவகுப்பை தொட‌ங்‌கி வை‌த்த முதலமைச்சர் கருணாநிதி, மனித சங்கிலி நடைபெறும் இடங்களை வாகன‌த்‌தி‌ல் செ‌ன்று பார்வையி‌ட்டா‌ர்.ம‌னித ச‌ங்‌கி‌லி‌யி‌ல் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டுக‌ள், ‌பா.ம.க., விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், எ‌ம்.‌ஜி.ஆ‌ர். கழக‌ம், ‌பு‌‌திய த‌மிழக‌ம், ஜனநாயக முன்னேற்ற கழக‌‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு க‌ட்‌சிகளு‌ம் ம‌த்‌திய, மா‌நில அமை‌ச்ச‌ர்க‌ள், ச‌ட்டம‌ன்ற, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், ‌திரை‌ப்பட‌த்துறை‌யின‌ர், பொதும‌க்க‌ள் உ‌ள்பட ஏராளமானோ‌ர் கொ‌ட்டு‌ம் மழையையு‌ம் பொரு‌ட்படு‌த்தாம‌ல் ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌ல் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.பேர‌ணி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டவ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை‌க் க‌‌ண்டி‌த்து முழ‌ங்க‌‌ங்க‌ள் எழு‌ப்‌பியதோடு, இ‌ப்‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ம‌த்‌திய அரசு தலை‌யி‌ட்டு உ‌ரிய நடவடி‌க்கை எடு‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வ‌லியுறு‌த்‌தின‌ர்.மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலகம் முதல் குறள‌க‌ம், அண்ணா சிலை வரை சட்டக் கல்லூரி மாணவர்கள், வழ‌க்க‌றிஞ‌ர்களுட‌ன் அமைச்சர்க‌ள் அ‌ன்பழக‌ன், ஆற்காடு வீராசாமி கலந்துகொ‌ண்டா‌ர்.க‌விஞ‌ர் வைரமு‌த்து, இய‌க்குன‌ர்க‌ள் ‌பார‌திராஜா சீமா‌ன், அ‌மீ‌ர், நடிக‌ர் ச‌த்யரா‌ஜ் உ‌ள்பட திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ப‌ங்கே‌ற்றா‌ர்.அண்ணாசிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் அ‌ணிவகு‌ப்‌பி‌ல் ப‌ங்கே‌ற்ற‌ன‌ர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க. பொன்முடி ஆகியோர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளு‌ம், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொ‌ண்டன‌ர்.இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் சென்னையில் அ‌க்டோப‌ர் 21ஆ‌‌ம் தே‌தி மனிதச் சங்கிலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.‌பி‌ன்ன‌ர் மழை காரணமாக ஒ‌த்‌திவை‌க்க‌ப்ப‌ட்ட ம‌னித ச‌ங்‌கி‌‌லி அ‌ணிவகு‌ப்பு போரா‌ட்ட‌ம் இன்று பிற்பகல் 3 மணி‌க்கு தொட‌ங்‌‌கி மாலை வரை ‌‌மிக‌ப்‌பிரமா‌ண்டமா‌க நடைபெ‌ற்றது. இ‌தி‌ல் ல‌‌ட்ச‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டு இல‌ங்கை‌ ‌த‌மிழ‌ர்‌களு‌க்கு ஆதரவாக த‌ங்களது எ‌ண்ண‌ங்களை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர்.

நன்றி - வெப்துனியா

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுதும் வலைப்பதிவர்கள் கைது செய்யப்படுவார்களா?

வை.கோ. திருமாவளவன், சீமான், அமீர், கண்ணப்பன் உள்பட பிரிவினையை தூண்டிவிடும் நோக்கத்தோடு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 150 - சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மதியம் 2 - மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய போது தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் மாணவர்களை நோக்கி இழிவாக பேசியதால் தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கியதால் அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறிக்குதித்து துவக்குகுண்டுகளிலிருந்து தப்பித்தார்கள். துவக்குக்கு அஞ்சாமல் உள் நின்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 - பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் இணையத்தையும் கண்காணிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே தமிழ் வலைப்பதிவர்களை மனநோயாளிகள் என்று தமிழக ஊடகங்களும், பிரபல இலக்கியவாதிகளிடமும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இப்படிப்பட்ட குற்றச்சாட்டால் மனநோய் கூடிப்போய் முற்றியநிலையில் பதிவு போட்டவர்களும் உண்டு. உதாரணத்திற்கு : http://cyrilalex.com/?p=417சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தீர்கள்! ஏதோ ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். அரசியல்வாதிகளை கைது செய்திருக்கிறீர்கள். சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். வலைப்பதிவர்களை கைது செய்தால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிப்பீர்களா? என்று வலைபதிர்கள் சார்பாக கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அவனவனும் நாட்டில எதற்கெதற்கோ சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவர்களுக்கு என்று ஒரு சங்கம் இருந்திருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் நமக்கென்று ஆதரவுக்கு வலைபதிவு சங்கத்தினர் வந்திருப்பார்களல்லவா என்று சிந்தனை வருகின்றது. வலை பதிவர்கள் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.இதற்கிடையில் இன்று எனக்கு வந்திருந்த மின்னஞ்சலில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சார்ந்த வீடியோ படங்களை பதிவு செய்வது சட்டப்படி குற்றமென்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.என் பதிவுகளை இதுவரை படித்திருந்த வாசகர்களுக்கோ அல்லது என்னை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பெங்களுர் குழுவினருக்கோ நான் சொல்லிக் கொள்ளுவதெல்லாம் நான் மிகத் தீவிர புலி எதிர்ப்பாளினியாக மாறிவிட்டேன். ( நாங்க ´பல்டி´ அடிப்பதுல எக்ஸ்பாட்டாக்கும்) நாளையில் இருந்து முற்றிலும் புலியெதிர்ப்புக்கு மாறிவிடுவேன். அதற்கு முன் புலியெதிர்ப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்சமீபத்தில் யூடிப்பில் சில வீடியோ படங்களை பார்த்தேன். அவை குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக சில வீடியோ இணைப்புகளை கொடுத்திருக்கின்றேன். அதனால் மிக முக்கியமான மிக மிக முக்கியமான இந்த ஆவணப்படங்களை புலியெதிர்ப்பாளர்கள் மட்டும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். வேறு வாசகர்கள் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.youtube.com/watch?v=o6JkHtFZY0Yhttp://www.youtube.com/watch?v=s6Nhq6PK0zIhttp://www.youtube.com/watch?v=paTj6lyz70Uhttp://www.youtube.com/watch?v=ARMS1BB13jk
(இன்னும் கிடக்கு உள்ள பாருங்க! நமக்கு டமில் தெரியாது। இவுக இன்னா சொல்றாக....)வாழ்க பேரினவாதம்!வளர்க தீவிரவாதம்! ஒழிக தமிழ் இனம்!ஜெய் ஹிந்த்! ஜெய் ராசபட்சேவ்! (சரிதானுங்களா?)
ரத்தக்காட்டேரி 23/10/2008

நன்றி - தமிழச்சி

ஓர் ஈழத்தமிழ் சிறுவனின் கடிதம்.

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது..)
நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை.......ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.....மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்தபோது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்றுதான் அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் 'சார்க்' கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே? அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....அமைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும்கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத்தமிழர்களே........ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.
வலி கலந்த நம்பிக்கைகளுடன்...

நன்றி - சுட்டது ;-)